உலகமயமாக்கள்.............
உலகமே கிராமமாய் போனது!
நீ வந்த பின்னே- பல
கிராமங்கள் அழிந்ததுவே
அதை என்ன சொல்ல
எல்லோரும் மண்ணர்தான் -என்கின்ற
நிலைமாறி ஓர் சர்வாதிகார
குடையின் கீல் புழுங்குகின்றோம்!
மென்பொருள் கற்றவன் உயருகின்றான்
உண்பொருள் தருபவன் சாகின்றான்!
மின்வலை பிடித்தவன் வாழ்கின்றான்
மீன்வலை பிடித்தவன் மடிகின்றான்!
நான் தரும் நெல்லுக்கு நானே பனம் தரும்
அவல நிலைக்கு நீ இழுக்கின்றாய்!
விரலிடுக்கிள் கடித்த அட்டை பூச்சியாய்
குறுதியை உறுஞ்சுகிறாய்!
என் நாசி குமுழியில் அமிழ காற்றினை
பரப்புகின்றாய்!
No comments:
Post a Comment
Please make your comment :