Yaso 4 U: மழைக் கவிதைகள் ...

மழைக் கவிதைகள் ...

பயணங்களில்
நிராகரிக்கப்படுகின்றன
ஜன்னலோர இருக்கைகள் ...
சாரல்களுக்கு பயந்து ....!
===========================
மழை நீரால் நிரம்பிய மைதானம்
மட்டைபந்து விளையாட்டு
மாறிப்போனது ...
தவளைக்கள் விடுவதாய் ...!
===========================
உன்னை நனைக்காமல்
கூட்டிவரும் எங்களை
வாசலோடு விட்டுவிடுகிறாய் என
வருத்தம் கொள்கிறது
குடையும்...என் மனசும் ..!
===========================
கொட்டும் மழை
குடை இருந்தும் நனைகிறான் ...
குடை வியாபாரி ...!
===========================
காகிதங்கள் நனைந்து விட்டன
கப்பல் செய்ய முடியவில்லை ...
இருந்தாலென்ன ....
வீடுதான் மிதக்கிறதே ..
கப்பலை விட அழகாய் ..!

No comments:

Post a Comment

Please make your comment :