Yaso 4 U: மழையும்... ஒரு கோப்பை தேநீரும்...

மழையும்... ஒரு கோப்பை தேநீரும்...


ஓர் பெருமழைக்கான அத்தனை
அறிகுறிகளுடனும்...
தூற துவங்கியிருந்தது...
அந்த மாலைப் பொழுது...

ஒரு கோப்பை தேநீரும்...
மழை ரசிக்கும் மனமுமாய்..
சன்னலோரமாய் அமர்ந்திருந்தேன்..

தூறல் வலுத்து...
பெருமழை தொடங்கிய சமயம்...

இதயத்தில் அதிர்வுகளை
ஏற்படுத்தியபடியே..
அலைபேசி திரையில்...
ஒளிர்ந்தது உன் பெயர்...

நீண்ட நெடு நாட்களுக்கு
பிறகான உன் அழைப்பு அது..

கனத்த மௌனம் சூழ்ந்த
என் தனிமையை...
உடைத்து..
பேச துவங்குகிறேன்.

என் மௌனங்களை...
உன் வார்த்தைகள்..
விழுங்கி கொண்டிருந்தன..

நீண்ட உரையாடலுக்கு பின்
சந்திக்க வேண்டுமென...
வார்த்தைகளை நிறுத்தினாய்..
இப்பொழுது மௌனம்...
இருவரையும் விழுங்கிக் கொண்டிருந்தது.

நீடித்த மௌனம்...
மிக தெளிவாய் உணர்த்தியது...
முடிவுக்கான முன்னுரை..
எழுதப்பட்டதை..

முடிவுரை எழுத...
இருவரும் நாள் குறித்தோம்...
பின் பேச ஏதுமற்று...
தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஓர் பெருமழை ஓய்ந்திருந்தது.
சன்னல் கம்பிகளில்..
துளிர்த்திருந்த மழைத்துளிகளை...
விரல்களில் அழுந்த துடைத்து...
விலகி நடக்கிறேன்.

ஒரு கோப்பை தேநீர்...
அப்படியே இருக்கிறது.

No comments:

Post a Comment

Please make your comment :