சரியான தவறு
சரியான தவறு
எனக்குள் சிலாகித்த
சில வரிகள்!
வாலாட்டிக் கொண்டே
வாங்கிய கல்லூரி பட்டம்!
மிதந்து கொண்டே
மூழ்கி போன இளமை!
பேசி பேசி
சொல்லாமல் போன காதல்!
தெரியாமலே தெரிந்ததை
எழுதிய தேர்வு!
எனக்கும் தெரியும் என்று
தெரியாமல் பேசிய வார்த்தைகள்!
தெரிந்த படியே காட்டிக்கொண்ட
தெரியாத விஷயங்கள்!
ரசித்த படியே
தொலைந்து போன வாழ்க்கை!
அழுது கொண்டே
சிரித்து பிரிந்த நட்பு!
இவையெல்லாம் இளமையில்
நான் போட்ட முடிச்சுகள்
Nice Yaso :)the above one i like your kavithai:) keep on post it!!!
ReplyDelete