Yasodharan Ramasamy - I can describe myself as an Apprentice in Agriculture, Avid internet reader, life long learner, Music lover.
சில்லுனு ஒரு காதல்
சில்லுனு ஒரு காதல், சூர்யா ஜோதிகா நடித்த இந்தப் படத்தை ஓரிரண்டு மாதங்கள் முன்பு பார்த்தேன்.சூர்யா ஜோதிகாவின் திருமணத்தின் பொழுது வெளிவந்தது மட்டுமே படத்திற்கான விளம்பரமாக அமைந்தது.படத்தில் கணவன் மனைவி உறவை/அன்பை ஆழமாக அதே சமயம் இயல்பாக இயக்குனர் சொல்லியுள்ளார், மற்றபடி படத்தைப் பார்த்தப்பொழுது என்னை எதுவும் மிகவாக கவரவில்லை.
படத்தின் பாடல்களை பிறகு தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது, பாடல் ஒளிப்பதிவு மிகவும் நெர்த்தியாக தெரிகிறது -குறிப்பாக "நியுயார்க் நகரம்" பாடல் மிக அழகாக Editing செய்யப்பட்டுள்ளது.ஒரு காட்சியில் சூர்யா வலதுப்பக்கமாக வெளியேரினால் அடுத்த காட்சியில் ஜோதிகா இடதுப்பக்கமாக தோன்றுவார், ஒருவரில் (கணவன் சூர்யா) இருந்து மற்றவர் (மனைவி ஜோதிகா) வருவது போல் மிக நெர்த்தியாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார் இயக்குனர் கிருஷ்ணா
இதைத் தவிர பாடல் சிடியை தினமும் வண்டியில் கேட்டப்பொழுது "நியுயார்க் நகரம்" பாடலும், "அம்மி மிதிச்சாச்சு" பாடலும் என்னை வெகுவாக கவர்ந்தது. இதில் "நியுயார்க் நகரம்" பாடல் முழுவதையும் கவிஞர் வாலி ஆங்கில கலப்பிண்றி (காபி பொன்ற ஒரிரு தவிர) இயல்பான தமிழில் எழுதியுள்ளார் - குறிப்பாக டயரியை (Diary) நாட்குறிப்பு என்று அழகாக சொல்லியுள்ளார். ஒவ்வொரு முறையும் அந்த பாடலை கேட்கும்பொழுதும் ரகுமான் குரல் மனதை வருடாமல் விடவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Please make your comment :