தோற்பதற்கு ஆசை ! ! !
இரு உள்ளங்கைகளை
மடக்கியவாறு புதிர்
போட்டால் சிறுமி
எந்த கைகளில்
மிட்டாய் என்று?
வலது கையில்
என்று நான்
சரியாக சொல்ல
பலரும் அறியுமாறு
பலர் அறிந்ததை
தாம் மட்டும்
அறியாதவாறு
வலம் இருந்து
இடம் மாறியது
மிட்டாய் !
பலத்த சிரிப்பிற்கு
பிறகு வெறும்
வலது கையுடன்
கிடைத்தது பதில்
" நீ தோற்றாய்"
என்று..
ஆம்!
ஆசைதான் எனக்கு...
புதிர் போட்ட
சிறுமியிடம் புதியதாய்
ஒருமுறை தோற்பதற்கு...
No comments:
Post a Comment
Please make your comment :